பருப்பிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Friday, May 11th, 2018

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பருப்பின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருத்தத்திற்கு அமைய இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உடைத்த பருப்பின் மீதான வரி 3 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதாவது 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகநிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரு ரூபாவாக இருந்த உடைக்கப்படாத பருப்பு மீதான இறக்குமதி வரி 7 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

உலக சந்தையில் பருப்பு விலை குறைவடைந்துள்ளதை கருத்திற்கொண்டு இறக்குமதி செய்யப்படும் பருப்பு மீதான விசேட வர்த்தக வரி திருத்தப்பட்டதாகவும் இதனால் உள்நாட்டுசந்தையில் சில்லறை விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் உலக சந்தையில் பருப்பின் விலை குறைந்துள்ளதால் அதன் பயனை இலங்கையின் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுப்பதே புதிய வரித் திருத்தத்தின் நோக்கம் எனவும் நிதி அமைச்சுகுறிப்பிட்டுள்ளது

Related posts: