முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் கால எல்லை ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, June 9th, 2021
அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்பதாக எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடையவிருந்தது. எனினும், தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கான காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்!
இலங்கையில் குறைவடைந்தது கொவிட் தொற்று!
இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு - சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்தி...
|
|
|


