இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு – சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவிப்பு!
Thursday, February 22nd, 2024
இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் வாய்ப் புற்றுநோயின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் எம்மால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது: வலி. தெற்குப் பிரதேச ச...
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து!
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டபய ரா...
|
|
|


