பரீட்சை திணைக்களம் மாணவர்களுக்கு செய்யும் அநீதி- இலங்கை ஆசிரியர்கள் சங்கம்!
Monday, January 2nd, 2017
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளைத் தாமதித்தல் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜனவரி 12ஆம் திகதியளவிலேயே பரீட்சை முடிவுகள் வெளியாகுமெனத் தெரிவித்திருக்கிறார். சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் தோற்றிய பிரயோகப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதால் முழுப் பெறுபேறுகளும் தாமதமாகவுள்ளதாக அவர் தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Related posts:
சுவிஸ் செல்கிறார் பிரதமர்!
முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!
நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவு - பசில் ராஜபக்ச தெரிவிப்பு!
|
|
|


