கடுமையான நிதி நெருக்கடியில் தெல்லிப்பழை வைத்தியசாலை பரோபகாரிகளை உதவுமாறு கோரிக்கை!

Sunday, January 8th, 2017

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் நாளாந்த பராமரிப்புப் பணிகளுக்கு கடுமையான நிதி நெருக்கடிகளைக் கொண்டுள்ளது. சிறிய உட்கட்டுமான வேலைகளுக்கு பொதுநலன் கருதி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை, தனிநபர்களை வைத்தியசாலையுடன் கை கோக்குமாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத் தலைவர் மருத்துவர் யோ.திவாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள பத்திரிகைச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையானது யாழ்.மாவட்டத்தில் 2ஆவது பெரிய வைத்தியசாலையாகவுள்ளது. வடக்கு மாகாணத்தில் பொதுவான அதி சிறப்புச் சிகிச்சை அலகுகளான புற்றுநோய்ப் பிரிவு மற்றும் உளநலப் பிரிவு என்பவற்றின் ஊடாக சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது. மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட வைத்தியசாலை என்பதால் சிறந்த சேவையை ஆற்றுவதற்கு நிதி போதுமானதாகயில்லை. சிறிய உட்கட்டுமான அபிவிருத்திகள், விடுதி மற்றும் தளபாடங்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளுக்காகப் பொது நலன் சார்ந்து செயற்படும் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் உதவியை எதிர்பார்த்துள்ளோம் எம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புவோர் 0212059227, 0779562742 என்ற தொலைபேசி இலக்கங்களுடாக தொடர்பு கொள்ள முடியும் என்றுள்ளது.

hospital698e

Related posts: