50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை -சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!

Wednesday, July 28th, 2021

இராஜதந்திர உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவுத் தபால் முத்திரைகளை வெளியிடுவதானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பெருமளவிலான அரவணைப்பையும் நட்பையும் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்துவதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை – சிங்கப்பூர் இடையே 1970 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கூட்டு முத்திரை வெளியீட்டு விழா ஜூலை 27ஆந் திகதி இலங்கை வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.  இதன்போது உரையாற்றுகயைிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இணையவழி ரீதியாக இணைந்து கொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த மைல்கல் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டதுடன், அவை கடல் சூழலைப் பாதுகாப்பதில் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பாக ‘கடல் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை சித்தரிக்கும் விதமாகவும், இலங்கையின் சதுப்புநிலங்கள் மற்றும் சிங்கப்பூரின் பவள சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேலும் சமூகம் மற்றும் சமூக மட்டங்களில் ஆழமாக வேரூன்றிய தொடர்புகளால் வளர்க்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதன்போது எடுத்துரைத்திருந்தார்.

இநநிலையில் சிங்கப்பூர் – இலங்கை உறவுகளின் அன்பான மற்றும் நீண்டகால இயல்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது கருத்துக்களில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய கோவிட்-19 காலகட்டம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் அர்த்தமுள்ள ஒத்துழைப்பு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 50 ஆண்டுகால நட்புறவைக் குறிக்கும் நினைவு முத்திரைகளை வெற்றிகரமாக வெளியிடுவதற்குப் பங்காற்றியமைக்காக, சிங்கப்பூர் அரசாங்கம், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூரின் இன்போகொம் ஊடக அபிவிருத்தி அதிகாரசபை, சிங்போஸ்ட், இலங்கையின் தபால் திணைக்களம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு அமைச்சு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: