இடம் பெயர்ந்தோரில் 577 குடும்பங்கள் இன்னமும் முகாம்களில்: தனியார் காணிகளை கொள்வனவு செய்து வழங்க அமைச்சரவை அனுமதி!

Saturday, April 6th, 2019

வடக்குக் கிழக்கில் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 577 குடும்பங்கள் தற்போதும் உள்ளூரிலுள்ள 25 நலன்புரி முகாம்களில் வாழ்க்கையைக் கழிக்கின்றனர். அவர்களுக்கென தனியாரிடம் காணி கொள்வனவு செய்யும் நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இவர்களுள் 381 குடும்பங்கள் காணிகளை இழந்த குடும்பங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச காணி போதுமானளவு இல்லாததால் அவர்களை மீள் குடியமர்த்த அரசு காணிகளை ஒதுக்கீடு செய்வது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது.

இதனால் இந்தக் குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான காணிகளை மதிப்பீட்டாளளர்களின் மதிப்பீட்டுக்கு தனியார் உரிமையாளர்களிடம் கொளவனவு செய்வதற்காகத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் நோக்கில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட...
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் - தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்...
பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாக்கும் வலையமைப்பு அவசியம் – பிரதமர் தினேஷ் குணவர்...