தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் – தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் எனவும் மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி உறுதிமொழி!

Tuesday, May 10th, 2022

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள மகா சங்கத்தினர் அமைதியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளிததாக குறிப்பிட்டுள்ளனர்

பௌத்த தேரர்கள் மற்றும் அருட்தந்தையர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தூண்டப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது  நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்த நிலையில், பல மில்லியன் ரூபா பெறுமதியாக வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிதரமர் பதவியிலிருந்து விலகுவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். வன்முறையை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   

இதனிடையே இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் சர்வகட்சித் தலைவர்களுடனான கூட்டத்தின் போது புதிய பிரதமர் குறித்து தீர்மானிக்கப்படும் என சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்..

அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று காலை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மத தலைவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். கட்சி சார்பற்ற பிரதமர் நியமனம், 15 பேர் கொண்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவை, சிவில் மக்களை கொண்ட ஆலோசனைக் குழுவை நிறுவுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணைகள் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, துரிதமாக தீர்க்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பித்தக்கது.

Related posts: