அரச நிறுவனங்கள் அனைத்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Wednesday, May 25th, 2016

புதிய எண்ணங்கள் மற்றும் உத்திகளின் ஊடாக கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சகல அரச நிறுவனங்களும் தமக்கிடையில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 30ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஊழியர்களைக் கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும்விழாவில் நேற்று பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறுதெரிவித்தார்.

‘இலங்கையை இணைத்த முடிவற்ற பணி’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விருது வழங்கும் நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் 25 வருடங்களாகப் பணியாற்றும் 360 ஊழியர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அவர்களில் 10 ஊழியர்களுக்கு ஜனாதிபதி விருதுகளைவழங்கி வைத்தார்.

அரசினுடைய பணிகளை நிறைவேற்றும்போது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையில் பிரிவுகளைப் பார்க்கமுடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தத்தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவது அவர்கள் எல்லோரினதும் பொறுப்பாகும்என்றும் தெரிவித்தார்.

அரச வளங்கள் மற்றும் சொத்துக்களை பயன்படுத்தி அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது அவற்றை முறையாக நிர்வாகம் செய்வது மட்டுமல்லாது நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மையை சரியான முறையில் பேணுதல் தொடர்பிலும் கூடியளவு கவனம் செலுத்தவேண்டும்.

அரச வளங்கள மற்றும் சொத்துக்களை பயன்படுத்தும்போது அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்றோமா என்பது தொடர்பில் உங்களுடைய மனட்சாட்சிகளை நீங்களே கேள்வி கேட்டுப் பார்க்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர் கடந்த ஆறு தசாப்தங்களாக அரச வளங்களைசரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் அபிவிருத்தியில் நாம் பாரிய வளர்ச்சியைஅடைந்திருக்க முடிந்திருக்கும் என்றார்.

Related posts: