அரச மருத்துவர் சங்கம் காப்புறுதி திட்டத்துக்கு எதிர்ப்பு!

Thursday, November 24th, 2016

புதிய வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் காப்புறுதிக்காக 2.7 பில்லியன் ரூபாய்களை காப்புறுதி நிறுவனங்களுக்கு செலுத்துவதற்கு அரச மருத்துவர் சங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவின் சொய்ஸா இதனை தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், இந்த காப்புறுதிகளின் நிமித்தம் பாடசாலை மாணவர்களை காப்புறுதி நிறுவனங்கள், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நேரிடும் என்று குறிப்பிட்டார்.

இலங்கையின் பாடசாலை மாணவர்கள், அரசாங்கத்தின் நிதியீட்டில் இன்று சர்வதேச தரத்திலான சுகாதார நலனைப்பெறுகின்றனர். புதிய காப்புறுதிமுறையின்படி வெறுமனே காப்புறுதி நிறுவனங்களுக்கே பணம் சென்று சேரும். அத்துடன் சுகாதார சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டமாகவும் அது அமையும் என்றுசொய்ஸா மேலும் தெரிவித்துள்ளார்.

wahees-1

Related posts: