80 ஆயிரம் புதிய குழந்தைகள் பதிவு செய்யப்படவில்லை – குடும்ப சுகாதார பணியகம் தெரிவிப்பு!

Sunday, July 12th, 2020

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு இருந்தமையினால் புதிதாகப் பிறந்த 80,000 குழந்தைகள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்று குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி மார்ச் , மே மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தினால் முடியாமல் போனதாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக பதிவு செய்யப்படாத குழந்தைகளை பதிவு செய்வதற்கு கைபேசி மூலமான பதிவு சேவை ஒன்று தொடங்கப்பட உள்ளது என்று பதிவாளர் ஜெனரல விதானகே தெரிவித்துள்ளார்.

இதன்படி பெற்றோர் தமது பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி கைபேசி சேவை மூலமாக தமது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கிராம சேவகரின் சான்று தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பொன்.சிவகுமாரனின் சிலையை நிறுவ எதிர்கொண்ட நெருக்கடிகளை வரலாறு பதிவு செய்துள்ளது - ஈ.பி.டி.பியின் யாழ...
ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் - ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க இடையே சந்திப்பு - அரசியலமைப்பு பேரவையை ஸ்த...
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு - பொதுமக்கள...