பங்களாதேஷ் பிரதமருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடல் – இருத்தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்வு!

Monday, December 13th, 2021

பிரதமர் மகிந்த ராஜபக்ச பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் விசேட டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இரண்டு நாடுகளின் மக்களுக்கும் பிரதிபலன்கள் கிடைக்கும் வகையில், இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையிலான இருத்தரப்பு தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அதில் கூறியுள்ளார்.

அத்துடன் பங்களாதேஷ் இலங்கையின் உண்மையான நண்பன் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு அண்மையில் பங்களாதேஷ் அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர்களை கடனுதவியாக கோரியிருந்தது.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், பிரதமர் பங்களாதேஷ் பிரதமரிடம் மேலதிக ஒத்துழைப்புகளை கோரியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

000

Related posts: