முல்லைத்தீவு விவசாயிகளுக்கு உரமானியக் காப்புறுதி இழப்பீடு!

Tuesday, January 31st, 2017

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை அழிவடைந்த நிலையில், விவசாயிகளுக்கு உரமானியக் காப்புறுதி இழப்பீடு வழங்குவதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கையில் வறட்சி நிலை காரணமாக 22,720 ஏக்கருக்கு மேல் அழிவடைந்துள்ளது. இதனால் 8,683 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரமானியக் காப்புறுதி இழப்பீடு வழங்குவதற்கு 10 கமநலசேவை நிலையங்கள் ஊடாக விபரங்கள் திரட்டப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவை திணைக்கள உதவிப்பணிப்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்புறுதி படிவங்களைப் பெற்று உரியகாலத்தில் பூர்த்தி செய்து கொடுப்பதின் மூலம் பயிர் அழிவிற்குரிய காப்புறுதி இழப்பீட்டினை பெற்றுக் கொள்ள முடியும் என கமநல சேவை திணைக்கள உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

fertiiliser_490609f

Related posts:

சரியான தீர்மானங்களின் காரணமாக ஜனாதிபதியால் 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிப்பு - அமைச்சர் நளின்...
வீதி விபத்துக்களை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை - எச்சரிக்கையுடன் செயற்படுமா...
வடக்கு - கிழக்கில் இடம்பெற்றுவந்த காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமை ஊடாக நடவடிக்க...