வடக்கு – கிழக்கில் இடம்பெற்றுவந்த காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமை ஊடாக நடவடிக்கை எடுத்ததுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் நடவடிக்கை – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024

வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவந்த காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமை ஊடாக நடவடிக்கை எடுத்ததுபோன்று ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் காணிப்பிரச்சினைகளை மத்தியஸ்த சபை முறைமையினூடாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

1988ஆம் ஆண்டு மத்தியஸ்த சபை சட்டத்தின் ஊடாக மத்தியஸ்த சபை ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னர் 2015 ஆம் ஆண்டாகும்போது இலங்கைக்குள் இடம்பெற்று வந்த வழக்கு நடவடிக்கைகளில் சுமார் நூற்றுக்கு 47 வீதம் தீர்த்துக்கொள்ள முடியுமாகியுள்ளது. அத்துடன் மத்தியஸ்த சபை முறைமையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் ஊடாக தற்போது வழக்கு தீர்க்கும் வீதம் சுமார் நூற்றுக்கு 70வீதம் வரை அதிகரித்துள்ளது.

அததுடன் நீதிமன்றங்களில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகள் தாமதிப்பது, நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை குறைவடைவதற்கு ஒரு காரணமாகும். அதனால் வழக்கு விசாரணைகள் தாமதமாவதை தவிர்த்துக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாக மத்தியஸ்த சபை முறைமையை விரிவுபடுத்துவது காலத்தின் தேவையாகும்.

மேலும் 5இலட்சம் ரூபா பெருமதியான வழக்கு விசாரணைகளை தீர்ப்பதற்காக மத்தியஸ்த சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் தற்போது 10இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இதன் மூலம் நிதி தொடர்பான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள இருக்கும் இயலுமை விரிவாக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலதிகமாக விசேடமாக வடக்கு கிழக்கி மாகாணங்களில் பாரியளவில் காணி தகராறு இடம்பெறுவதால் அதற்காக இந்த இரண்டு மாகாணங்களுக்கும் தனியான காணி மத்தியஸ்த சபை முறையை அறிமுகப்படுத்தி இருந்ததுடன் அது மிகவும் வெற்றிகரமான முறையில் செயற்படுத்தப்பட்டது. அதனால் மேலும் 16 மாவட்டங்களுக்கு இந்த காணி மத்தியஸ்த சபை முறைமையை அறிமுகபத்தியுள்ளோம்.

இதன் காரணமாக நிதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு இருந்த பாரியளவிலான தகராறுகளை சமரசம் செய்துகொள்ள முடியுமாகியுள்ளது. அதேபோன்று இதன் காரணமாக நீதிமன்றங்களில் குவியும் வழக்கு விசாரணைகளை குறைத்துக்கொள்ளவும் மத்தியஸ்த சபை முறைமை ஊடாக முடியுமாகியுள்ளது.

மேலும் நீதிமன்றங்களில் இருந்துவரும் 20இலட்சம் ரூபா பெருமதிக்கு குறைவான வழக்கு விசாரணைகளை தனியான நீதிமன்றம் ஒன்றில் விசாரணை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் காரணமாக மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் தேங்கி இருக்கும் இவ்வாறான வழக்கு விசாரணைகளை விரைவில் விசாரித்து முடிவுக்கு கொண்டுவர முடியும். அல்லது மத்தியஸ்த சபைக்கு இந்த விசாரணைகளை அனுப்பி அங்கு சமரசம் செய்துவைப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகாண முடியுமாகிறது என்றார்.

000

Related posts: