வீதி விபத்துக்களை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வாகன சாரதிகளுக்கு பொலிசார் அறிவுறுத்து!

Wednesday, December 27th, 2023

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களையும், மேலும் பல குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிசாரால் புதிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாகன சாரதிகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இதனை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்கவுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டிறுதியை அண்மித்துள்ள வேளையில் பண்டிகைகள், கேளிக்கைகள் என மக்கள் ஈடுபடும் வேளையில் மது பாவனை அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் அதன் கூட்டாக ஏனைய குற்றங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதனால், பண்டிகைக் காலங்களில் அதிக கொண்டாட்டங்களை முன்னிட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கைது செய்ய 24 மணி நேர சிறப்பு நடவடிக்கையை  காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த முயற்சி சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: