சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளது: மக்களே அவதானம்!

Tuesday, October 8th, 2019

நாட்டில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென பொது சுகாதார பரிசோதகர்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்னர்.

யாழ். குடாநாட்டில் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 5 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் 13 உணவகங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கரவெட்டி, நெல்லியடி, நாவலர்மடம், வல்லை ஆகிய பகுதிகளில் உள்ள பல உணகங்களில், வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்படும் மரக்கறிகளை பயன்படுத்தி உணவு தயாரித்துள்ளனர். இதன்போது உணவகங்களை சோதனையிட்ட பரிசோதகர்கள், அந்த மரக்கறிகளை குழி தோண்டி புதைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்த பின்னர் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனையிடுமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: