ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் !

Thursday, September 30th, 2021

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் குறித்த விஜயம் அமைய உள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம்  திகதிமுதல் 5 ஆம்  திகதி வரை ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கையில் தங்கிருப்பார் எனவும் இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வாரம் இந்தியாவும் இலங்கையும் பலதரப்பட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய விரிவான பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தன.

இதேவேளை நியூயோர்க்கில் நடந்த ஐ.நா அமர்வின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: