நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு – அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, May 10th, 2021

நாட்டில் கொரோனா நோயாளர்கள் மேலும் அதிகரித்தால் பல பகுதிகளை தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் நாட்டை ஓரளவு முடக்கவேண்டியிருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள துறைசார் அதிகாரிகள் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் தயாராகயிருக்குமாறு அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பசில் ராஜபக்ச தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டில் காணப்படும் சுகாதார நெருக்கடி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.

இதன்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா நோயாளர்கள் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் இது நாட்டின் சுகாதார துறையினரின் கடும் சுமையை செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நாட்டில் நேற்று கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதாவாறு 2500 ஐயும் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையில் பாரதியஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணை நிறைவடையவில்லை - சட்டமா அதிபர் திணைக்...
அனைத்து பாடசாலைகளையும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் திறப்பதற்கு நடவடிக்கை - எதிர்வரும் வெள்ளியன்று ...