இலங்கையில் பாரதியஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை – அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண!

Wednesday, March 10th, 2021

இலங்கையில் நாம் அறிந்த வகையில் பாரதியஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து கூறிய அவர் –

“இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் அந்நாட்டு அரசியல்வாதியொருவரால் அறிவிக்கப்பட்டது.இது தொடர்பில் இலங்கையிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதேநேரம் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான சட்டரீதியான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே காணப்படுகிறது.

நாம் அறிந்த வகையில் இலங்கையில் அவ்வாறானதொரு கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

எனவே நாட்டு மக்கள் இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் பாரதிய ஜனதா கட்சிக்கும்  இல்லை” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: