நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒரே படகில் பயணிக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டியது மிகவும் அவசியம் – தெற்காசிய கூட்டுறவு மேம்பாட்டு மையம் தொடர்பில் சீனத்துவர் தெரிவிப்பு!

Friday, September 17th, 2021

கொரோனா தொற்றின் புதிய அலையை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தெற்காசிய நாடுகள் எதிர்கொள்கின்றன. இதனால் இலங்கை முன்பை விட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்க்கொண்டுள்ளது என தெரிவித்துள் சீன தூதுவர் குய் ஜென்ஹொங் இவ்வாறனதொரு நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒரே படகில் பயணிக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டியது மிகவும் அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் உண்மையாகவே கூட்டுத்திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.  இதனை மையப்படுத்தி இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து கடந்த ஏப்ரல் மாதம்  சீனா முதல் முறையாக கூட்டு பொறிமுறையை நிறுவியது.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த ஆறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் கூட்டு முயற்சிகளை ஆராய்ந்துள்ளனர்.

அந்தவகையில் இந்தக் கூட்டு முயற்சி வெற்றியளித்துள்ளது. சீனா – தெற்காசியா கூட்டணி ஊடாக அவசர பொருட்கள் வழங்கல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நிறுவுவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சீனா – தெற்காசியா வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையம் என்ற கூட்டணியில் செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜுலை மாதம் தொடக்கம் உத்தியோகப்பூர்வமாக இந்த மையம் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனப்படையில் கடந்த இரண்டு மாதங்களில், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ பொருட்கள் தடையின்றி தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனூடாக பிராந்திய நாடுகள் சிறந்த நன்மைகளை அடைந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தொற்றுநோயை எதிர்கொள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பே சரியான தெரிவாகின்றது. தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் பெரும் அழுத்தத்தங்களை எதிர்க்கொண்டிருந்த போதிலும் 70 நாட்களில் சீன – தெற்காசிய அவசர விநியோக இருப்பு நிறுவப்பட்டு விநியோகமும் இடம்பெற்றது. பிராந்திய நாடுகளுக்கு உறுதியான மற்றும் வலுவான ஆதரவை வழங்குவதற்காகவே இந்தத் தளம் உருவாகியுள்ளது.

அடுத்து தடுப்பூசி ஒத்துழைப்பு என்பது கொவிட்-19 ஐ தோற்கடிக்க ஒரு முக்கிய ஆயுதமாகும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகளின் முக்கிய பங்கினை  ஆறு நாடுகளை பிரதிநிதித்துவம் செய்த  வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

அதேபோன்று கொவிட் தொற்று பரவலை தடுப்பூசிகளால் மாத்திரமே தடுக்க முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வலியுறுத்தியுள்ளார். செப்டம்பர் தொடக்கத்தில் சீனா சுமார் 120 மில்லியன் தடுப்பூசிகளை தெற்காசிய நாடுகளுக்கு வழங்கியுள்ளது.

அவற்றில், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் முறையே 70 மில்லியன், 22 மில்லியன், 19 மில்லியன் மற்றும் 7.4 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளன.  மேலும் பாகிஸ்தான் மற்றும் பங்காளதேசம் சீனாவின் ஆதரவுடன் உள்ளூர் தடுப்பூசி உற்பத்தியை ஆரம்பித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பூசி வழங்கலில் உலக நாடுகளுக்கிடையில் சாதணை படைத்துள்ளது. இதனையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

சீனா – இலங்கை ஒத்துழைப்பு, சீனா – தெற்காசிய ஒத்துழைப்பின் முக்கியமான பங்குதாரராக இலங்கை இருப்பதால் நிச்சயமாக பயனடையும். துறைமுகநகரம்,  ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் தொழில்துறை பூங்கா ஆகியவை சிறந்த திட்டங்களாக அமைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் படகுகளை உருவாக்கும் மாலைத்தீவு நிறுவனம் திட்டத்தால் தெற்காசிய நாடுகளின் அதிக ஆர்வத்தை ஈர்த்ததுள்ளது. எதிர்காலத்திலும்  பிராந்திய கூட்டுறவு திட்டங்கள் நிறுவப்படும். இதனூடாக இந்த பிராந்தியத்தில் சிறந்த வளர்ச்சியை அடைய  எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related posts: