நெடுந்தீவு கடற்பரப்பில் 23 இமீனவர்கள் கைது!
Tuesday, December 12th, 2017
கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்றிரவு(11) கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார். நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மீனவர்களின் 5 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை துறைமுகத்தில் நைஜீரிய கடற்படை கப்பல்!
பல்கலைக்கழக அனுமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!
நாட்டின் கடன் பளு அதிகரிக்காது - ஹர்ஷ டி சில்வா!
|
|
|


