இலங்கை துறைமுகத்தில் நைஜீரிய கடற்படை கப்பல்!
Wednesday, October 5th, 2016
நைஜீரிய கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
“யுனிட்டி” என்ற நைஜீரிய கப்பலே இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். குறித்த கப்பல் இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை வந்துள்ள நைஜீரிய கடற்படை கப்பல் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பதுடன், குறித்த கப்பலில் இலங்கை வந்துள்ள கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையினர் எற்பாடு செய்துள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

Related posts:
கல்வித்துறையின் தர மேம்பாட்டுக்காக புதிய சட்டதிட்டங்கள் - பிரதமர்!
´உறுதியான நோக்கம் - தொழில் செய்யும் நாடு´ : வெளியானது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவின் தேர்தல்...
பணம் பறிக்கும் மோசடி கும்பல் - உடன் தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்!
|
|
|


