´உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு´ : வெளியானது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம்!

Friday, October 25th, 2019


ஒரு நாட்டில் ஒரே நீதியாக இருக்க வேண்டும். அது சிறிய பெரிய என்ற பேதமின்றி அமுலாக வேண்டும். எனது இந்த தேர்தல் விஞ்ஞாபனம் எனது முழு ஆட்சி காலம் முழுவதுமாக இருக்கும் என்பதுடன் தான் விழ்ந்’து கிடக்கும் நாட்டை கட்டியெழுப்புவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஶ்ரீலங்கா பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடன வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது .இந்த நிகழ்வில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எவ்வாறாயினும் நாட்டு மக்களுக்கு தற்போது தேவை என்னவென்றால் வாழக்கை செலவை குறைப்பதே ஆகும். நான் உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தில் இருக்கும் சிக்கல்களை நிறைவு செய்வேன்.

உற்பத்திகளை அதிகரித்து மக்கள் மீது சுமத்தப்பட்டுளள வரியை குறைத்து மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய சிறிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளேன்.

சுற்றுலாத்துறையில் அதிக வருமானம் வரும்படி மேம்படுத்துவோம். அதேபோல வீதி அபிவிருத்தி போக்குவரத்து, சுகாதாரம், விளையாட்டு, கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தி அதன்மூலம் புதிய தொழிகளை ஏற்படுத்த முடியும்.

உலர்வலய விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை செய்து கொடுக்க உள்ளேன். தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாயம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவோம். நாம் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் தேவையான தொழிநுட்பத்தை வழங்குவோம்.

எமது இளைஞர், யுவதிகளை நாம் மீண்டும் விவசாய துறைக்கு உள்வாங்க வேண்டும். பெண்களை உற்சாகப்படுத்தி அவர்களின் மூலம் தற்போது தலைவிரித்தாடும் போதைப்பொருள் பாவனையை, வியாபாரத்தினை குறுகிய காலத்தில் நிறைவு செய்து ஊழல் மோசடியை ஒழிப்பேன்.

எனது தலைமைத்துவ அரசாங்கத்தில் ஊழலுக்கு இடமில்லை. எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்த பொறுப்பை நான் செய்து முடித்தேன். நாம் யாராக இருந்தாலும் பரவாயில்லை. எந்த மொழியில் பேசினாலும் பிரச்சினை கிடையாது.

இறுதியில் நாம் இலங்கையர்கள் என்று புரிந்து கொண்டால் சரி. அதுவே எனது இலட்சியம், குறிக்கோள். நான் நாட்டை கட்டியெழுப்புவேன் என்று உறுதி வழங்குகிறேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: