நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்தும் நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் 10 வீதமாகவே உள்ளது!

Tuesday, March 14th, 2017

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையும் மின்சக்தி அமைச்சும் தெரிவித்துள்ளன.

இருந்தும்  நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் பத்து சதவீத மட்டத்திலேயே இருந்துவருவதாக மின் சக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின் நிலையங்களை அண்டியுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 சதவீதமான மட்டத்தை அண்மித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் பத்து சதவீத மட்டத்திலேயே இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டார். மழையுடன் கூடிய காலநிலைத் தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குடிநீரைப்பொருத்தவரையில் நிலவிவந்த பிரச்சினை தற்போது நீங்கி வருவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஏ.அன்சார் தெரிவித்துள்ளார். சபையின் குழாய் நீர் கிடைக்கப் பெறாத அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, கம்பஹா போன்ற பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் பௌஸர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: