மீன்பிடி இறங்குதுறைகள் புனரமைப்பு! 

Tuesday, January 8th, 2019

வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு கருத்திட்டங்களான மீன்பிடி இறங்குதுறைகளும், நங்கூரமிடும் தளங்களும் யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி, திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளையில் பலாலி வடக்கு இறங்குதுறையும், ஊறணி இறங்குதுறையும், சங்கானை பிரதேச செயலகப் பிரிவில் அராலி இறங்குதுறையும், பருத்தித்துறை செயலகப் பிரிவில் பொலிகண்டி இறங்குதுறையும் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக செலவிடப்பட்ட தொகை 270 மில்லியன் ரூபாவாகும்.

இதனூடாக ஆயிரத்து 280 மீனவர் குடும்பங்கள் நன்மையடைய உள்ளனர் என வி.சிவஞானசோதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: