நண்பனை விட புத்தகங்கள் ஒரு மனிதனை வலிமையானவனாக்கும் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, January 10th, 2023

நண்பனை விட புத்தகங்கள் ஒரு மனிதனை வலிமையானவனாகவும் உலகத்தையே மாற்றிமைக்கும் வல்லமை கொண்டவனாகவும் ஆற்றல்கொண்டது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜளநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகப் பொறுப்பாளரும் வேலணை பிரதேச சபையின் தவிசானருமான நமசிவாயம் கருணாகரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வேலவணை பிரதேசத்தில் இன்றையதினம் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு   உரையாற்றுகயைிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

எமது நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் அழியாக பொக்கிசமாக எமது மக்களுடன் ஒன்றிணைந்திருந்தது கல்விதான்.

ஆனாலும் அன்றிருந்த கல்விமுறை இன்று நவீனத்துவத்தின் காரணமாக காலத்துக்கு ஏற்றவகையில் மாற்றங்களை கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது.

இதனால் மாணவர் மத்தியில் மட்டுமல்லாது பெரியவர்கள் மத்தியிலும் நூலக வாசிப்பு பழக்கம் இல்லாது அரிகிவருகின்றது.

இதனால் எமது இளம் சமூகத்தினர் பல்வேறு வரலாறுகளையும் கலாசார விழுமியங்களையும் அறிந்துகொள்ளாமலேயே உருவாகும் நிலை உருவாகிவருகின்றது.

அதுமட்டுமல்லாது நூலக பழக்கத்தை மாணவர்கள் பின்பற்றிவந்தால் அல்லது அதில் நேரத்தை கழித்தால் சமூக பிறழ்வுகளிலும் போதைக்கு அடிமையாவதிலிருந்தும் தம்மை பாதுகாத்துகொள்ளவும் முடியும்.

இன்று எமது சமூகத்தில் போதை பாவனை என்ற கொடிய பரவலொன்று விரிவடைந்துவிட்டது. இதை தடுப்பதற்கு அல்லது இல்லாதொழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

அதேபோன்றுமற்றொரு தொற்றபான டெங்கின் தாக்கமும் தற்போது அதிகரித்துவருகின்றது இதையும் நாம் எமது பகுதியில் விழிப்புணர்வுகள் மூலம் மக்களிடையே  கொண்டுசென்று கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சூழலையும் ஆரோக்கியமான இளம் சமூதாயத்தையும் உருவாக்க பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை பங்குபற்றியிருந்ததுடன் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: