நிலவும் சீரற்ற காலநிலை – ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிப்பு அனர்த்த என முகாமைத்துவ நிலையம் தகவல்!
Tuesday, October 31st, 2023
நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால், தென் மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தென்மாகாணத்தில் ஆயிரத்து 160 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் 453 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடுத்த வாரம் அடையாள பணிபகிஷ்கரிப்பு!
போத்தல் குடிநீரின் விலையை அதிகரிக்குமாறு குடிநீர் போத்தல் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை !
இலங்கை - இந்திய பாலம் அமைக்கும் தருணம் இது - இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்து!
|
|
|


