இலங்கை – இந்திய பாலம் அமைக்கும் தருணம் இது –  இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்து!

Tuesday, May 5th, 2026


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழி இணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்திய உயர் ஆணையர் சந் தோஷ் ஜா மீண்டும் வலியுறுத்தியுள்ளமை யோடு, இது விடயத்தில் தயக்கம் காட்டிக்கொண்டிருப் பதற்கான காலம் முடிந்து விட்டது என்றும் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது அவர்
தொடர்ந்தும் கூறுகையில்-

கடல் வழியாகக் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் சுமார் 300 கிலோமீற்றர் என்றும். ஆனால் நமது இரு நாடுகளுக்கும் மிக அருகிலுள்ள இடங்களான இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தூரம் சுமார் 30 கிலோமீற்றர் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இருப்பினும், நேரடிச் சாலை இல்லை. ரயில் பாதை இல்லை. பெரிய அளவில் இயங்கும் படகு சேவை இல்லை. மின்சாரக் கட்டமைப்பு இணைப்பு இல்லை. குழாய்வழித் தொடர்பு இல்லை. வெளிப்படையாகச் சொல்வதானால். இது ஒரு முரண்பாடான நிலை.

இரண்டு அறைகளுக்கும் பொதுவான சுவரிலேயே, அந்த இரண்டு அறைகளுக்கு இடையில் ஒரு கதவை அமைக்க முடியும் என்ற போதிலும், அருகருகே உள்ள இரண்டு அறைகளை வெளியே உள்ள ஒரு நடைபாதை வழியாக மட்டுமே இணைப்பது போல இது உள்ளது என்றும் அவர் கூறினார்.

“பாக் ஜலசந்தியின் குறுக்கே ஒரு பாலம் அல்லது சுரங்கப்பாதை வழியாக தரைவழி இணைப்பு ஏற்படுத்துவது குறித்து பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

உலகம் முழுவதும் இதுபோன்ற வழித் தடங்களுக்குப் போதுமான எடுத்துக் காட்டுகள் உள்ளன. அதன் பொறியியல் நன்கு அறியப்பட்டுள்ளது.
அதன் பொருளாதாரம் கவர்ச்சிகரமானது. இதுபோன்ற பாலங்கள் எங்கு கட்டப்பட்டிருந்தாலும், அதன் நன்மைகள் மறுக்க முடியாதவை.

ஆனால் நாம் தொடர்ந்து தயங்குகின்றோம். ஆதனால் நான் தெளிவாகச் சொல்கின்றேன், தயக்கம் காட்டிக் கொண்டிருப்பதற்கான காலம் முடிந்துவிட்டது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நிரந்தர இணைப்பு, இந்தப் பிராந்தியம் முழுவதின் பொரு ளாதாரப் புவியியலையும் மாற்றி அமைக்கும்.

எந்தவொரு துறைமுக விரிவாக்கமோ அல்லது விமான நிலைய மேம்பாடோ தனியாக அடைய முடியாத வகையில், இலங்கையை அது விரும்பும் ஒரு மையமாக இந்த ஒழுங்கு மாற்றும்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் “இன்று இந்தியா இலங்கையின்
மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக விளங்குகின்றது.

டித்வா போன்ற இயற்கை சீற்றங்கள் அல்லது மேற்கு ஆசியாவில் ஏற்படும் மோதல்கள் போன்றசவால்கள் இருந்தபோதிலும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மை ஆதாரமாக இந்தியா விளங்குகின்றது.

மேலும், இந்த நாட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மிகப் பெரிய ஆதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த ஆண்டு, மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகள் உட்பட, இலங்கையில் செய்யப்பட்ட இந்திய முதலீடுகள் மொத்த முதலீட் டில் 50 வீதத்தைத் தாண்டியது.

இந்திய நிறுவனங்கள் தொலைத் தொடர்பு, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக் கல், நிதிச் சேவைகள். போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய வற்றில் முதலீடு செய்துள்ளன என் றும் அவர் மேலும் கூறினார்.

Related posts: