நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடன் ஒளிக்க வேண்டும்  JVP அறைகூவல்!

Wednesday, May 10th, 2017

அரசாங்கம் ஒரு அடக்குமுறை செயல் முறைக்குள் நுழைந்துள்ளது. இலவச கல்விகாக  போராடும் மாணவர்களையும் . உர மானியத்திற்காகவும் தங்கள் அறுவடைக்கு உத்தரவாத விலையையும் வேண்டிப் போராடும்  விவசாயிகளையும் அடக்க நினைக்கிறது. இந்த மே தினத்தின்போது கற்றுக் கொண்ட  படிப்பினைக்கு மாறாக  தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கின்றது இந்த அரசாங்கம்.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாரிய மக்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் இல்லையெனில் அரசாங்கம் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை நசுக்குவதற்கு முயற்சிக்கும் என்று ஜே.வி.பி யின் தலைவர் அநுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பெலாவட்டியில் உள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டிலேயே  அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி ரணிலும் மைத்திரியும் இணைந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒளிப்பதாக மக்கள் முன் வாக்குறுதி அளித்தனர் குறிப்பாக மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அணைத்து மேடைகளிலும் இதனை வலியுறுத்தினார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய அவரது முதல் உரையிலும் இதனைத் தெரவித்தார், மறைந்த சோபிதா தேரரின் இறுதி நிகழ்வுகளின் போது  அவரது பூதவுடலின் மீது சத்தியமும் செய்தார்  நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன்  என்று.

ஆனால் 2 / 3rd பெருன்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 வது திருத்த சட்ட மூலத்தின்  ஊடக  நிறைவேற்று ஜனாதிபதி முறையில் திருத்தங்கள் மட்டுமே செய்யப் பட்டன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி முறையை முற்றிலுமாக அகற்றுவது என்பதே அவர் மக்களிடம் பெற்ற  ஆணை ஆகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுவதற்கான போராட்டத்தை ஜே.வி.பி. தொடங்கிவிடும். ஆனால் இதற்கு  ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடாத்துவது அவசியமாகின்றது.   நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒரு புதிய அரசியலமைப்பினாலோ அல்லது திருத்தம் செய்வதன் மூலமோ ஒழித்தல் ஒரு புதிய தேர்தல் முறையை உருவாக்குதல் மற்றும் மக்களின் உரிமைகளை ஒருங்கிணைப் பதற்காக அரசியலமைப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவை கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் TNA, ஸ்ரீ.ல.மு.கா., ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன்  ஏற்கனவே கலந்துரையாடியுள்ளோம். விரைவில் ஜனாதிபதியையும் சந்திக்க உள்ளளோம்  எனவும் தெரவித்தார் ஜே.வி.பி யின் தலைவர்.

Related posts: