கொரோன அச்சுறுத்தல் – யாழ் நகரப் பகுதியின் பிரதான சந்திகளில் இராணுவம் தீவிர நடவடிக்கையில்!
Tuesday, April 27th, 2021
யாழ் மாவட்டத்தின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்து வருகின்றனர்.
அத்தோடு பொதுமக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பதோடு யாழ் நகரப் பகுதிகளில் சன நெரிசலை தடுக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுத்து வருகின்றார்கள். பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதனை உறுதிப்படுத்தும் முகமாகவும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜப்பானிலிருந்து 30 இலங்கையர்கள் வெளியேற்றம்.!
சட்டவிரோத ஆள் கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - நீதி அமைச்சர் தகவல்!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட...
|
|
|
இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது - மேலும் ஒரு லட்சம் பைசர் தடுப்பூச...
எல்லை நிர்ணய பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரை நீடிப்பு!
நாடாளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்க்காது - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்...


