நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9000 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
Thursday, September 3rd, 2020
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்களில், இரண்டாயிரத்து 428 குடும்பங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் ஆயிரத்து 671 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அனர்த்தங்களினால் 33 வீடுகள் முழுமையாகவும், 555 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் 2 இடர்தங்கல் முகாம்களில், 99 குடும்பங்களை சேர்ந்த 325 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
1200 வைத்தியர்கள் சேவையில் இணைப்பு!
சுகாதாரப்பணி உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு!
சகோதர தமிழ் மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.- வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!
|
|
|


