நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க – சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மின் சந்திப்பு – இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளிப்பு!
Saturday, May 4th, 2024
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் சீனாவின் துணை நிதியமைச்சர் லியோ மின் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என அந்த நாட்டு துணை நிதியமைச்சர் குறிப்பிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார்
000
Related posts:
விடுதலை செய்ய எனக்கு அதிகாரமில்லை - அமைச்சர் சுவாமிநாதன்!
சிறுப்பிட்டியிலிருந்து நவீன அரிசி ஆலை மருதங்கேணிக்கு மாற்றம்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப...
|
|
|


