நாளைமுதல் பொதுப்போக்குவரத்தில் கட்டாயமாக்கப்படும் புதிய நடைமுறை – மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

பொதுபோக்குவரத்து தொடர்பில் நாளைமுதல் புதிய நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுபோக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பிலும் திடீர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
முறையற்ற வகையில் பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுபோக்குவரத்து சேவையை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுகிறது.
அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் போக்குவரத்து வசதி கருதி மாத்திரமே தொடர்ந்தும் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|