உள்ளூராட்சி சபைகளின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் ஆராய்வு!

Saturday, July 21st, 2018

வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளின் சிறப்பான நிதி முகாமைத்துவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாகாண நிதிப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் 34 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. இவை தற்போது சபை உறுப்பினர்களுடன் செயற்பட்டு வருகின்றன. இவர்களின் நிதி முகாமைத்துவம் சரியாக இருந்தால் மாத்திரமே சேவைகளை வழங்க முடியும்.

இதனைக் கருத்திற்கொண்டு மாகாணத் திறைசேரி உள்ளுராட்சி மன்றத்தின் ஊடாக சகல சபைகளுக்கும் வினாப்பத்திரம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான கணக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் உரிய கணக்குகள் குறித்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா, கணக்காய்வுகள் சரியானதாக உள்ளனவா, நிதி மூலங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளனவா  உள்ளிட்டு பல்வேறு வினாக்களுக்கு அடையாளம் இட்டு அதனை உள்ளுராட்சி மன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அதில் உள்ள குறை நிறைகள் ஆராயப்பட்டுப் பிழைகளை எவ்வாறு நிவர்த்தி  செய்யலாம் போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: