நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் – போக்குவரத்து சபையின் தலைவர்!
Monday, February 10th, 2020
இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெறும் டிக்கட் மோசடி காரணமாக இந்த நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சோதனையிட இராணுவ பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் இந்தக் குழு செயற்பட்டு வருகிறது.
இலங்கையில் 107 போக்குவரத்து சபைகள் உள்ளன. அனைத்து போக்குவரத்து சபை பேருந்துகளிலும் பல நடத்துனர்கள் பாரியளவு டிக்கட் மோசடிகள் செய்வதனால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
இலங்கைக்கு அவுஸ்ரேலிய 89 மில்லியன் நிதியுதவி!
இலங்கையில் நேற்று மட்டும் 368 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் உயிரிழப்பு - இராணுவத் தளபதி!
மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுப் பிரிவு அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது கைவ...
|
|
|


