இயேசு கிறிஸ்து உயிர் தியாகம் செய்த பெரிய வெள்ளியின் சிறப்பு!

Friday, April 14th, 2017

உலகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள், இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு என்கின்ற பாஸ்கா மறை நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் திருப்பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு என்பவற்றை கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டுகளிலும் பெரிய வெள்ளியன்று நினைவு கூறுகின்றார்கள்.

இந்த உலகை பாவத்தில் இருந்து மீட்பதற்காக வந்த இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நிறைவு கூறும் முகமாக பெரிய வெள்ளி அனுஷ்டிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன், பெரிய வெள்ளி, புனித சனி, பாஸ்கா ஞாயிறு ஆகிய தினங்கள் மிக முக்கியமானதாகும்.மேலும், நாம் அனைவரும் மற்றவர்களோடு எவ்வாறு அன்புறவோடு வாழ வேண்டும், சீடத்துவம் என்றால் என்ன? என்றவற்றை இந்த புனித வாராம் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

Related posts: