மருதங்கேணி – பருத்தித்துறை வீதி புனரமைக்க ஜப்பானில் நிதி திரட்டத் திட்டம் – சுமந்திரன் அதிரடி அறிவிப்பு…!

Tuesday, May 24th, 2016

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் போர்க்குற்றம் போன்ற விடயங்களில் அரசு தனது வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றினால் தான் மருதங்கேணி பருத்தித்துறை வீதி புனரமைக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (2016.05.23) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 3.10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது நீண்ட காலமாக புனரமைக்கப்படாதுள்ள பருத்தித்துறை – மருதங்கேணி வீதி மீள் புனரமைப்பது தொடர்பான சமூக மட்ட அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதன்போது பதிலளித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான ஆபிரகாம் சுமந்திரன், புதிய அரசியலமைப்புத் தீர்வு போர்க்குற்றம் தொடர்பில் புதிய அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. அதற்கு நாமும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி வருகிறோம்.

போர்க்குற்றம், பொறுப்புக் கூறல், விரைவான விசாரணை, வாக்குறுதி நிறைவேற்றம் போன்ற விடயங்களில் அரசு விரைவாக நிறைவேற்றினால் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள்புனரமைத்தலுக்கென நன்கொடையாளர் மாநாட்டை ஜப்பானில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டடுள்ளது.

இம்மாநாட்டை நடத்தினால் ஐரோப்பிய ஒன்றியமும் சலுகைகளை வழங்கும். அதனூடாகக் கிடைக்கும் நிதிகள் மூலமே இவ்வாறான பாரிய புனரமைப்புக்களைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். மொத்தத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதூடாக பிரதேச ஒருங்கிணைப்புக்குத் தலைவர் அந்தஸ்தைப் பெற்றுள்ள சுமந்திரன், மருதங்கேணி பருத்தித்துறை வீதி புனரமைக்க ஜப்பானில் நிதி திரட்ட வேண்டும் எனப் பொறுப்பற்ற பதிலைக்கூறி நழுவிக்கொண்டார்.

ஆனாலும் பொது அமைப்புக்கள் தொடர்ந்து வீதி தொடர்பாக கேள்விகளை எழுப்பிய போது, எமக்கு காப்பெட் வீதி வேண்டாம் சாராதண வீதியே போதும் என தான் வீதி அபிவிருத்தி அமைச்சரிடம் சொல்லியுள்ளதாகவும் தெரிவித்து, ஒலி வாங்கியை நிறுத்திக் கொண்டார்

Related posts: