நாய்களால் ஏற்படும் பாதிப்புக் குறித்து அறிக்கையிடுமாறு நீதிவான் உத்தரவு!

Wednesday, January 23rd, 2019

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் திண்மக் கழிவுகள் கொட்டும் இடத்தை அண்மித்த பகுதியில் நாய்களால் ஏற்படும் பாதிப்புக் குறித்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வலி.தென்மேற்குப் பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு நீதிவான் பணித்துள்ளார்.

நாய்களால் பாதிப்புக் குறித்த வழக்கின் விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் நீதிவான் திடீரென்று நேற்றுப் பயணித்து நிலமைகளை அவதானித்தார். அவர் செல்வதையடுத்து பணியில் ஈடுபட்டனர். அதற்காக வெடிகளையும் கொழுத்தி வீசினர். எனினும் நாய்கள் அந்த இடங்களையே சுற்றிச்சுற்றி வந்தன.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அங்குவரும் அடியார்களின் பாதுகாப்புக் கருதி ஆலய சுற்றாடலில் கட்டாக்காலிகளாகத் திரிந்த நாய்களை யாழ்ப்பாண மாநகர சபைத் தொழிலாளர்கள் பிடித்து கல்லுண்டாய் பகுதியில் விட்டிருந்தனர். அவை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமல்ல வீதியால் செல்லும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிலை குறித்து வலி.தென்மேற்குப் பிரதேச சபை மல்லாகம் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருந்தது.

இதேவேளை யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர்ப் பிரதேச சபை ஆகிய இரு சபைகளும் கல்லுண்டாய் வெளியில் தினமும் கொட்டும் திண்மக் கழிவுகளால் மக்களுக்கு மட்டுமல்ல வயல் நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்;.

பல மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளைத் தொடர்ந்து நீதிவான் திண்மக்கழிவுகள் கொட்டப்படும் இடத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் ஆராயக் கல்லுண்டாய் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

Related posts: