நீர்வரி இடாப்பு திருத்தப் பணிகள் விரைவில் –  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்!

Thursday, January 5th, 2017

இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள நீர்வரி இடாப்பு திருத்தப் பணிகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இரணணைமடுக் குளத்தின் கீழ் உள்ள 21ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளின் உரிமை தொடர்பான நீர் வரி இடாப்பு புதுப்பிக்கப்படாத நிலையில் கடந்த 1992ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இடாப்பே தற்போதும் பாவனையில் இருந்த வருகின்றது. இந்நிலையில் காணி உரிமை மாற்றம், காணிகள் குடும்பங்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தவித உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் விவசாய குடும்பங்கள் பலர் தமக்கான உரிமைகளை இழக்கின்றனர்.

எனவே நீர் வரி இடாப்பினை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையிலே நீர் வரி இடாப்பினை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

2091444536sun-2-450x303

Related posts:

நல்லிணக்கத்திற்காக உழைத்துவருவது ஈ.பி.டி.பி கட்சிதான் : உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது -  வடக்...
புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள் குறித்த தமிழ்கூட்டமைப்பின் யோசனைகளை ஆராய்வதற்கு அரசு தயார் - நீதிய...
பொருளாதார நெருக்கடியால் பல சிறுவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளனர் -- குடும்ப சுகாதார பணியக...