நாம் அதிகாரத்தில் இருந்த போது வடக்கில் சமூகச் சீர்கேடுகள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது – ஈ.பிடி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ரங்கன்!

Saturday, July 21st, 2018

எமது கட்சியிடம் வடக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் வீழ்ச்சிகண்டுள்ள வடக்கின் கல்வி துறை மீண்டும் தூக்கி நிறுத்தப்படும் என்பதுடன் இன்று எமது மக்களை அச்சுறுத்திவரும் சமூக சீரழிவுகளும் இல்லாதொழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ வழிசமைத்துக் கொடுப்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் நாம் அதிகாரத்தில் இருந்த போது சமூக சீரழிவுகளும் கலாச்சாரப் பிறழ்வுகளும் வடக்கில் தலைதூக்காது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. மாறாக இன்று மத்திய அரசாங்கத்தை தாங்கிப்பிடித்துக் கொண்டும் மாநில அரசை ஆட்சி செய்துகொண்டும் இருப்பவர்களைப் போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவில்லை

நாட்டில் சட்டவிரோத செயற்பாடுகளும் சமூகவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து சென்றுள்ளதால் பாரதூரமான குற்றத்தை செய்த பலருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று கருத்து எழுந்துள்ளதுடன் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முயற்சிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனாலும் மரணதண்டனை என்பது மனிதநேயத்துடன் தொடர்புடையதொன்று. சமூகம் நல்வழிப்படவேண்டுமானால் சட்டத்துறையில் அதி உச்ச தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமானதாகவே இருக்கின்றது.

ஆனாலும் ஒருவர் திருத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அந்தவகையில் மரண தண்டனை என்பது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகவே உள்ளது.

அந்தவகையில் சமூக சீரழிவுகள் நாட்டில் உச்சம் பெற்றுவருவதால் அதை தடுத்து நிறுத்த சட்டத்துறை ஊடாக கடமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். எனவே குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவேண்டும் அதனூடாகவே சமூகத்தை நல்வழிக்கு கொண்டு செல்ல முடியும்.

வடக்கில் வன்முறைகள் அதிகரித்துச் செல்ல வடக்கின் ஆளுமையற்ற ஆட்சியாளர்களது செயற்பாடுகளே காரணமாக இருக்கின்றது. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்க தேவையற்ற பிரச்சினைகளை தேடிப்பிடித்து சபையில் சண்டையிட்டுக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களது சமூகப் பிரச்சினைகளை கூட தீர்த்துவைக்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்த அவர் நாம் அதிகாரத்தில் இருந்த போது சமூக சீரழிவுகளும் கலாச்சாரப் பிறழ்வுகளும் வடக்கில் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது தமிழ் மக்கள் நிம்மதியாகவே வாழக்கூடியதாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts:

சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது - இராஜாங்க அம...
வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்த நடவடிக்கை...
இவ்வருடம் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் 24 வீதமானோர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர் - இலங்கை சுற்...