சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது – இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ தெரிவிப்பு!

Friday, October 1st, 2021

சேதனப் பசளை உற்பத்திக்காக இதுவரை 4 இலட்சத்து 81 ஆயிரம’; விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

உர உற்பத்திக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் 12 ஆயிரத்’து 500 ரூபா கொடுப்பனவில் 7 ஆயிரத்’து 500 ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் விவசாயிகளுக்கு ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளுடன் பசுமை பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சு உப குழுவின் மீளாய்வு கூட்டம் நேற்றையதினம் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் எதிர்வரும் பெரும்போகத்தில் செய்கையாளர்களுக்கு தேவையான சேதனப் பசளையை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

இதனிடையே, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய களை நாசினிகளின் தட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றாடல் அமைச்சர் மஹந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: