வெளிநாடுகளிலிருந்து மேலும் 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
Friday, June 12th, 2020
நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று இரவு 10.30 க்கு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள் விமான நிலைய வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜப்பானில் தங்கியிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் இருவரும் இன்று (12) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு நோயை ஒழிக்க நடவடிக்கை!
‘அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டில் வளரும் மரம்’ எனும் தொனிப்பொருளில் கடற்றொழில் நீரியல் வளமூல அமைச்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை – பெப்ரல் அமைப்பு கவலை!
|
|
|


