‘அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டில் வளரும் மரம்’ எனும் தொனிப்பொருளில் கடற்றொழில் நீரியல் வளமூல அமைச்சு வளாகத்தில் மரநடுகை திட்டம்!

Friday, February 7th, 2020

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சத்தின் நோக்கு எனும் எண்ணக்கோட்பாட்டின் பிரகாரம் மரங்கள் நிரம்பிய பசுமையான நாடொன்றை உருவாக்குவதற்காக 72வது சுதந்திர தினத்திற்கு சமாந்திரமாக ஆரம்பிக்கப்பட்ட மர நடுகை திட்டத்திற்கு பங்களிப்பு வழங்குவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளமூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம் 2020.02.07ம் திகதி அமைச்சு வளாகத்தில் மர நடுகைத்திட்டம் முன்னெடுகக்கப்பட்டது. இதில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க இந்நாட்டில் காடுகளின் அடர்த்தி துரிதமாக வீழ்ச்சியடைந்து வருவது நாம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை என்றும் இதன் காரணமாக வரட்சி, வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட பாரிய சுற்றாடல் அனர்த்தங்களை நாம் அண்மைக்காலங்களில் சந்திக்க நேர்ந்ததாகவும் தெரிவித்ததுடன் அதற்கு புறம்பாக பயிர்ச்செய்கைக்காக காடுகளை அழித்தல், நகர மயமாக்கல், குடியிருப்பு திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் முறையற்ற காணி பராமரிப்பு, காடுகளுக்கு தீ வைத்தல், மர கடத்தல் மற்றும் அதனுடன் இனைந்த வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களினால் நாட்டின் வனவளம் துரிதமாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும் இதனை நன்கு உணர்ந்துள்ள தற்போதைய அரசாங்கம் நாடெங்கும் மர நடுகை திட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் இச் சந்தர்பத்தில் கடற்றொழில் நீரியல் வள மூல அமைச்சு என்ற வகையில் இத்திட்டத்திற்கு பங்களிப்பு நல்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும் என தெரிவித்தார்.

Related posts: