மீண்டும் நடைமுறைக்கு வருகிறது முகக்கவசம் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Monday, July 25th, 2022

பொது இடங்களுக்குச் செல்லும்போதும், பயணத்தின் போதும் முன்பு போல் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் கோவிட்-19 பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதனால் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக விலகல் மற்றும் கைகளை கழுவுதல் போன்ற ஏனைய சுகாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டுமென அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று 56 COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: