வடக்கில் தங்கியுள்ள பிற மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரையும் தற்போது அனுப்பும் சாத்தியம் இல்லை – ஆளுநர் தலமையிலான கூட்டத்துல் முடிவு!

Friday, April 10th, 2020

வடக்கு மாகாணத்தில் தங்கியுள்ள ஏனைய மாவட்டத்தவர்கள் 2 ஆயிரம் பேரையும் சொந்த மாவட்டங்களிற்கு அனுப்புவது தொடர்பில் தேசிய ரீதியிலேயே இறுதி முடிவு எட்ட வேண்டிய நிலை காணப்படுவதாக நேற்றை ஆளுநர் தலமையிலான கூட்டத்துல் கூறப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கில் இருக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக பதியப்பட்டுள்ள அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரும் , கம்பகா மாவட்டத்தில் 40 ஆயிரம் பேரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் உள்ளனர்.

இதனால் தங்கியுள்ள மாவட்டத்தில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு அனுப்புவது என்ற விடயத்தில் ஜனாதிபதி செயலணியில் முடிவினை எட்டவேண்டிய நிலமையுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

Related posts: