நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி எதிர்பார்ப்பு – ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிராந்தியப் பணிப்பாளரிடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எடுத்துரைப்பு!

Monday, October 4th, 2021

வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமாவிடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தெற்காசியாவில் சிறந்த ஆதிவேக நெடுஞ்சாலையாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைந்திருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பணிப்பாளர் கலாநிதி சொன் வொன் அமைச்சர் ஜோன்ஸ்டனிடம் தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் பெர்ணான்டோவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமாவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், வீதி பாதூகாப்பு, போக்குவரத்து நெரிசல் முகாமைத்துவ திட்டமொன்றை புதிதாக ஆரம்பித்தல் மேலும் புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்களைகளை ஆரம்பித்தல் என்பன தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையின் நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்ட முன்னெடுப்பு தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் இதன்போது வினவியதோடு இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வடக்கு, தெற்கு கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேச வீதிகளை நெடுஞ்சாலை ஊடாக இணைப்பதன் மூலமாக நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு கிராமிய வீதி அபிவிருத்தி செயற்பாடுகள் வாயிலாக கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு உந்துசக்தி அளிக்க இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் ஒரு இலட்சம் மரக்கன்று நடும் திட்டம் என்பன தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் துறைமுக பிரவேச வீதி தாமதமடைவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு இந்த தாமதத்தை தடுக்க தேவையான தீர்மானங்கள் மற்றும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமாவிடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது இலங்கையில் வீதி அபிவிருத்தி முன்னேற்றம் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதால் எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி பணிப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: