புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களில் 56 பேர் பலி

Monday, April 18th, 2016

சித்திரை புத்தாண்டு காலத்தில் கடந்த 6 தினங்களில் இடம்பெற்ற 56 வாகன விபத்துக்களில் 58 பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 36 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக காவல்துறை போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அனர்த்தங்களில் 88 பேர் வரை உயிரிழந்ததனர். அந்த அனர்த்தங்களில் அதிகமானவை மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமையால் ஏற்பட்டவை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 546 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 846 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களும் 475 பேர் முச்சக்கரவண்டி செலுத்துனர்களும் அடங்கவதாக காவல்துறை போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர். அத்துடன் தனியார் பேருந்து செலுத்துனர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர புத்தாண்டு பிறப்பு காலப்பகுதி தொடக்கம் இதுவரை திடீர் அனர்த்தங்கள் காரணமாக காயமடைந்த 938 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:


இ.போ.ச ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன துறைசார் தரப்ப...
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மை குறி...
எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படுகின்றது கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் !