பொது மக்களின் செயற்பாட்டினால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம் – எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர்!

Thursday, October 14th, 2021

இலங்கையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைவடைந்து வரும் நிலையில், நாட்டு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டால் மீண்டும் அபாய நிலைமைக்கு நாடு செல்லும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டை பச்சை வலயத்திலேயே நீடிக்கவைப்பது மக்களின் கடமையாகும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் –  கொரோனா தொற்றுப் பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த நாடுகள் மட்டுமே பச்சை வலயத்தில் சேர்க்கப்படும் என்றும் இலங்கையில் கொரோனா தொற்று பரவலில் தாக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் இலங்கையும் சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலயத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையில் தற்போது பதிவாகும் நாளாந்தக் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் நாட்டை மீண்டும் கொரோனா பச்சை வலயத்துக்குள் அனுமதித்துள்ளன என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: