O/ L பரீட்சை விடை பத்திர மதிப்பீட்டு நடவடிக்கை!

Wednesday, December 13th, 2017

கல்வி பொதுச்சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் அறிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட பணி ஜனவரி 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் இடம்பெறும். இரண்டாம் கட்ட நடவடிக்கை ஜனவரி மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 3ஆம் திகதி வரை இடம்பெறும்.

முதற்கட்ட விடைப்பத்திரங்கள் நடவடிக்கையின் போது 57 பாடசாலைகள் இதற்கென பயன்படுத்தப்படும். இந்த காலப்பகுதியில் இந்த பாடசாலைகள் மூடப்பட்டு இருக்கும். இப் பாடசாலைகளுக்கான புதிய தவணைக்கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் ஆரம்பமாகும். இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்கான 26 பாடசாலைகள் பயன்படுத்தப்படும். இந்த காலப்பகுதியில் பகுதிநேர அளவில் மூடப்பட்டு இருக்கும். இந்த பாடசாலைக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

Related posts: