நாட்டில் புதிய 25 ஸ்மார்ட் வகுப்பறைகள்!
Saturday, October 1st, 2016
நாட்டில் புதிய செயற்திட்டம் ஒன்றின் அடிப்படையில் 25 ஸ்மார்ட் ரக வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நவீனமானதும் தொழிநுட்ப மயப்படுத்தப்பட்டதுமான சர்வதேச கல்வி முறைகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
மேலும், இந்த வகுப்பறைகள் முற்றிலும் கணனி மயப்படுத்தப்பட்டதாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் ஊடக நிகழ்ச்சி ஒன்றின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts:
கையூட்டு பெற்ற முகாமைத்துவ உதவியாளர் கைது!
மதுபான விற்பனை 40 சதவீதத்தினால் வீழ்ச்சி - மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!
TSP உரம் பெப்ரவரியில் இலங்கைக்கு வரும் - விவசாய அமைச்சு அறிவிப்பு!
|
|
|


